"இசை மழையில் நீங்கள் நனையத் தயாரா?".. தாவரங்களை நாற்காலியில் அமர்த்தி இசை கச்சேரி!.. என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்பெயினில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளர்களுக்கு பதிலாக தாவரங்கள் இடம்பெற்றிருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பார்சிலோனாவின் லைசு ஓபரா ஹவுஸ், 3 மாதங்களுக்கு பின்னர் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில், பார்வையாளர்களுக்கு பதிலாக தாவரங்கள் இடம்பெற்றிருந்தன. பார்வையாளர்களின் இருக்கைகளில் 2 ஆயிரத்து 292 செடிகள் வைக்கப்பட்டிருந்தன.
ஸ்பெயினில் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தியதை கொண்டாடும் விதமாக இத்தாலிய இசையமைப்பாளர் கியாகோமோ புச்சினியின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இருக்கையில் இடம்பெற்றிருந்த இந்தச் செடிகள் சுகாதார பணியாளர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கு பரிசாக வழங்கப்படுகின்றன.
இது குறித்து கருத்து தெரிவித்த லைசு ஓபரா, ஒரு வேதனையான காலத்திற்கு பிறகு வித்தியாசமான பார்வையுடன் நாங்கள் எங்கள் பணிகளை தொடர இது வழிவகுத்துள்ளது. இதன் மூலம் தாவரங்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி இயற்கையுடனான எங்களது பிணைப்பை உணர்த்தும் விதமாக இருந்தது என தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
