'உலுக்கி' எடுக்கும் கொரோனா... ஸ்பெயினில் 'மோசமான' பாதிப்பு 'எதனால்?'... ஆய்வில் வெளியாகியுள்ள 'அதிர்ச்சி' காரணங்கள்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 26, 2020 07:56 PM

ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள மோசமான கொரோனா பாதிப்பிற்கு அவர்களுடைய சமூக வாழ்க்கை முறையும் ஒரு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

Lifestyle, Weather And Other Reasons Why Corona Hit Spain So Hard

உலகிலேயே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ள ஸ்பெயினில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்கு அதிகளவில் கொரோனா பரவ எவையெல்லாம் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான ஆய்வில், ஸ்பெயின் மக்களிடையே உள்ள பரஸ்பரம் கட்டித் தழுவுதல், முத்தமிடுதல் போன்ற சமூக வாழ்க்கை முறை மற்றும் குடும்பத்திலுள்ள வயதானவர்கள் மற்றும் இளையவர்களிடையே உள்ள அதிகளவு நெருக்கம் ஆகியவை அங்கு வைரஸ் பரவியதற்கு முக்கிய காரணமெனத் தெரியவந்துள்ளது.

மேலும் அங்கு பிப்ரவரி இறுதியில் நிலவிய நல்ல வானிலையால் அதிகளவு மக்கள் வெளி இடங்களுக்கு சென்றது மற்றும் அதிக மக்கள் அடர்த்தி ஆகியவையும் பரவலுக்கான காரணமாக கூறப்படுகிறது. அத்துடன் அங்கு நோய் பரவத் தொடங்கிய பின்னரே அதன் தீவிரத்தை உணர்ந்ததும் ஒரு முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது.