பிறந்து ‘27 நாள்களே’ ஆன குழந்தைக்கு கொரோனா.. ஆனா எந்த சிகிச்சையும் கொடுக்காமல் குணமடைந்த ‘ஆச்சரியம்’.. எப்படி தெரியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Apr 27, 2020 08:16 AM

கொரோனா பாதிக்கப்பட்ட பிறந்த குழந்தை ஒன்று மருத்துவ சிகிச்சைகள் ஏதுமின்றி தாய்பால் மட்டுமே குடித்து குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

South Korean baby recovers from COVID19 with breastfeeding only

தென்கொரியாவில் பிறந்து 27 நாள்கள் ஆன பெண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை கொரோனாவுக்கென்று பிரத்யேக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பிற நோய்களுக்கான மருந்துகள் மூலம்தான் கொரோனா குணப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிறந்து 27 நாள்களே ஆன குழந்தைக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என அந்நாட்டு மருத்துவர்கள் ஆலோசனை செய்துள்ளனர். அதன்படி 3 வாரங்களுக்கு குழந்தைக்கு தாய்பால் தவிர வேறு எதுவும் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் வேறு எந்த சிகிச்சையோ, மருந்துகளோ குழந்தைக்கு கொடுக்கப்படவில்லை.

இதனை அடுத்து 20 நாட்கள் கழித்து குழந்தைக்கு பரிசோதனை செய்துள்ளனர். அதில் கொரோனா நெகட்டீவ் என வந்துள்ளது. வெறும் தாய்ப்பால் மூலமே குழந்தை குணப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த முறை மற்றவர்களுக்கு பொருந்தாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி தனித்தன்மை கொண்டது என அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.