'24 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 64 பேருக்கு கொரோனா!'.. சென்னையிலும் தமிழ்நாட்டிலும் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று 64 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1821 லிருந்து 1885 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் இன்று 28 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம், தமிழகத்தில் இதுவரை 24 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 960லிருந்து 1020ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
