கொரோனா 'இல்லாத' நகரமானது... அனைத்து நோயாளிகளும் 'குணமடைந்து' டிஸ்சார்ஜ்... 'பெருமையுடன்' அறிவித்த 'சீனா'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 26, 2020 05:15 PM

சீனாவின் வுஹான் நகரம் கொரோனா பாதிப்பு இல்லாத நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

All Coronavirus Patients In Wuhan Have Been Discharged Says China

கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதல்முதலாக பரவத் தொடங்கிய சீனாவின் வுஹான் நகரம் இன்று கொரோனா இல்லாத நகரமாகியுள்ளது. அங்கு புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், ஏற்கெனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அனைத்து நோயாளிகளும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாகவும் சீனா பெருமையுடன் அறிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள சீன சுகாதார கமிஷன் செய்தித் தொடர்பாளர் மீ ஃபெங், "ஏப்ரல் 26ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி, வுஹான் நகரில் புதிய கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாகும். ஏற்கெனவே சிகிச்சை பெற்றுவந்த அனைத்து கொரோனா நோயாளிகளும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவப் பணியாளர்களுடைய பணிகளுக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார். வுஹானில் இதுவரை 46,452 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களில் 3869 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பு எண்ணிக்கை சீனாவின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையில் 84% என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.