#COVID19INDIA: 'லாக்டவுனில் சிறார் ஆபாசப்படம் பார்ப்பது 95% அதிகரிப்பு!'.. 'வாட்ஸ் ஆப், கூகுள், ட்விட்டருக்கு நோட்டீஸ்!!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா காலத்தில் சிறார் ஆபாச படங்களை பார்ப்பது 95 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூகுள் வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கையாக இந்தியா முழுவதும் இரண்டு கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சில செயலிகள் மூலம் குழந்தைகளுக்கு எதிரான ஆபாச பொருட்கள் அனுப்பப்படுவது தொடர்பாக கூகுள் நிறுவனத்துக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் என்கிரிப்டட் வாட்ஸ்அப் குழுக்களிலும் இது போன்ற பொருட்கள் கிடைப்பதாகவும், இதுபோன்ற குரூப்களில் இணைவதற்கான இணைப்பு அழைப்புகள் ட்விட்டரில் பகிரப்பட்டதையும், அவற்றை அனுமதிப்பது தொடர்பாகவும், பதில் அளிக்குமாறு வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
