”ஒருவேளை 'இவர்' பதவிக்கு வந்தால்... கிம் ஜாங் உன்-னை விட 'கொடூரமாக' ஆட்சி புரிவார்?” - உலக அரசியல் ஆய்வாளர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Apr 26, 2020 11:00 PM

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அண்டை நாடான தென்கொரியா இந்த தகவல்களை தொடர்ந்து மறுத்து வருகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் வடகொரியா வெளியிடவில்லை.

After Kim Jong Un who is the next leader of North Korea?

இதற்கிடையில் கிம் ஜாங் உன்னுக்கு பின் அங்கு ஆட்சிக்கு வரப்போவது கிம்மின் சகோதரியா? இல்லை அவரது மனைவியா? என சர்வதேச அளவில் விவாதங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன. கிம்மின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அடுத்ததாக அவரது சகோதரி கிம் யோ ஜாங் ஆட்சிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கிம்மின் சகோதரி ஆட்சிக்கு வந்தால் கிம்மை விடவும் மோசமான ஆட்சியாக அமையும் என சர்வதேச வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். வடகொரியாவின் ஆயுத குவிப்புக்கு காரணமே கிம் யோ தான் என்றும், கிம் ஜாங் உலக நாடுகளை எதிர்கொண்டதை விட கிம் யோ கொஞ்சம் கடுமையாகவே நடத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.