வெளியான 'நல்ல செய்தி' ... 'இந்தியாவில்' முதல்முறையாக கொரோனா பரவல் 'வேகம்' குறைந்தது... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Apr 26, 2020 10:05 PM

உலகம் முழுவதும் முடக்கிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸில் இருந்து, இந்தியா மீண்டு வருவதாக நம்பிக்கையூட்டும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

India Records Lowest Daily Growth Rate in Covid-19 Infections in 24 Ho

கொரோனா வைரஸ் தொடர்பான விவகாரங்களை கையாள்வதற்கான உயர்மட்ட அளவிலான மத்திய மந்திரிகள் குழுவின் 13-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் தலைமை தாங்கினார். குழுவில் இடம் பெற்றுள்ள மூத்த மத்திய மந்திரிகள் ஹர்தீப் சிங் பூரி, எஸ்.ஜெய்சங்கர், நித்யானந்த ராய், மன்சுக் மாண்டவியா மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இதில் கொரோனா தொடர்பாக மத்திய அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், கையிருப்பில் உள்ள மருத்துவ உபகரணங்கள், ஹாட் ஸ்பாட் பகுதிகளில் பின்பற்ற வேண்டிய உத்திகள், மத்திய அரசு எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கைகள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள், கட்டுப்படுத்தும் விதம், மாவட்டங்கள் பின்பற்ற கூறப்படும் ஆலோசனைகள், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேவையான தற்செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் நம்பிக்கையூட்டும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைந்து முதல்முறையாக 6% என்றளவில் உள்ளதாக வெளியான தகவல் மிகுந்த  ஏற்படுத்தி உள்ளது. அதுகுறித்து கீழே காணலாம்:-

* நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கி ஏற்படும் உயிரிழப்பு சதவீதம் 3.1 சதவீதம் ஆகும். அதே நேரத்தில் குணம் அடைவோர் விகிதாசாரம் 20 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இது, வளர்ந்த நாடுகளை விட அதிக விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

* நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் நபர்களின் இரட்டிப்பு விகிதம், தற்போதைய நிலவரப்படி 9.1 நாட்கள் ஆகும். இது கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதை எடுத்துக்காட்டுகிற முன்னேற்ற நிலை ஆகும்.

* தற்போது குணம் அடைந்தோர் எண்ணிக்கை 5,062 ஆகும். இது 20.66 சதவீதம்.

* நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் நேற்று வரை 1,429 பேருக்கு கொரோனா வைரஸ் புதிதாக தாக்கி உள்ளது. மொத்தம் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 506 ஆக உயர்ந்து இருக்கிறது.

* நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 100-ஐ கடந்த பிறகு முதன்முதலாக நேற்றுதான் பாதிப்பு வளர்ச்சி வீதம் மிகக்குறைவான அளவில் 6 சதவீதம் என்ற அளவை பதிவு செய்து உள்ளது.

* கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 775 ஆக உயர்ந்துள்ளது.