'நோய் எதிர்ப்பு சக்தி சான்றிதழ்' என்றால் என்ன?.. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள்... வெளிநாடு செல்வதில் சிக்கல்!?.. உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Apr 26, 2020 01:04 PM

கொரோனா வைரஸால் ஒருமுறை பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து மீண்டு அவர் உடலில் ஆன்டி பாடி (நோய் எதிர்ப்புச்சக்தி) உருவாகி இருந்தாலும் அவர் மீண்டும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகமாட்டார் என்ற ஆதாரபூர்வமான சான்றுகள் ஏதும் இல்லை என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

who warns nations about the immunity certificate for covid19

உலகளவில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 2 லட்சத்தைக் கடந்துள்ளது, பாதிப்பு 30 லட்சத்தை நெருங்குகிறது. மனித சமூகமே கொரோனாவால் மிரண்டு வீட்டுக்குள் முடங்கி இருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை விரைவாகக் கண்டுபிடிக்கக் கோரி உலக நாடுகளை ஐநா. சபையும் கேட்டுக்கொண்டு தொடர்ந்த வலியுறுத்தி வருகிறது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு நேற்று விடுத்த எச்சரிக்கையில், "கொரோனா வைரஸால் ஒருமுறை பாதிக்கப்பட்டு மீண்டவர் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகினால் மீண்டும் அவர் கொரோனாவில் பாதிக்கப்படமாட்டார் என்பதற்கு எந்த ஆதாரப்பூர்வ சான்றுகளும் இல்லை. மீண்டவர் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கொரோனாவிலிருந்து காக்கும் என்ற உத்தரவாதம் இல்லை.

ஆனால், மக்களில் பெரும்பாலும் கொரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டுவிட்டால், உடலில் உருவான ஆன்டிபாடி மூலம் மீண்டும் கொரோனா வராமல் தடுக்க முடியும் என நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அது தவறானதாகும் .

ஏப்ரல் 20-ம் தேதிவரை நடத்தப்பட்ட எந்த ஆய்விலும் கொரோனாவில் ஒரு முறை பாதிக்கப்பட்டவர் மீண்டும் பாதிப்புக்குள்ளாகமாட்டார் என்பதற்கு சான்று இல்லை. கொரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டவர் உடலில் குறைந்த அளவு ஆன்டி பாடி இருந்தால் அவர்கள் மீண்டும் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புள்ளது.

சில நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு நோய்எதிர்ப்பு சக்தி சான்றிதழ் வழங்கி வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புகின்றனர். அவ்வாறு அனுப்புவது ஆபத்தானது, வழங்குவதும் முறையல்ல, பயனும் இல்லை. அவர்கள் மீண்டும் கொரோனா தொற்றுக்கு ஆளாகலாம்" என எச்சரித்துள்ளது.