'இந்தியாவை நோக்கி படையெடுக்கும் அடுத்த ஆபத்து...' 'இது எங்க கொண்டு போய் விடுமோ?...' 'ஐ.நா. எச்சரிக்கை...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவில் உள்ள விளை நிலங்களை மிகப்பெரிய அளவிலான வெட்டுக்கிளிகள் கூட்டம் தாக்கக் கூடும் என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்ரிக்காவில் இருந்து கிளம்பும் இந்த வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகளுடன் இணைந்து இனப்பெருக்கம் செய்து, ஏமன், ஈரான், சவுதி அரேபியா, பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெட்டுக்கிளிகள் பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள விளை நிலங்களை கடுமையாக பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் இந்தியாவின் உணவு உற்பத்தியில் மிக முக்கிய பங்காற்றுகிறது. இம்மாநிலம் பாதிக்கப்படும்போது இந்தியாவில் மிகப்பரவலாக உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் சுமார் 4 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும் என்றும் தினமும் 35 ஆயிரம் பேருக்கான உணவு தானியங்களை வெட்டுக்கிளிகள் அழித்திடும் என்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
