10 லட்சத்தை 'நெருங்கும்' பாதிப்பு... 'வரலாறு' காணாத உயிரிழப்புக்கு நடுவே... ஊரடங்கை மீறி கடற்கரையில் 'குவிந்த' மக்கள்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 26, 2020 09:36 PM

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் வரலாறு காணாத அளவிற்கு உச்சக்கட்ட உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

US Crowd Gathers At California Beaches Amid Coronavirus Lockdown

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இதுவரை 9 லட்சத்து 36 ஆயிரத்து 293 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை  53 ஆயிரத்து 511 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே ஊரடங்கு அமலிலுள்ள நிலையில், அங்கு நிலவும் வெப்பநிலை காரணமாக கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் புகழ்பெற்ற ஹன்டிங்டன், நியூ போர்ட் கடற்கரையில் குவிந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் பொது இடங்களில் கூட வேண்டாம் எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் வற்புறுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் கடற்கரையில் கூடியுள்ளனர். இதையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.