5 வருட 'ரகசிய' திட்டம்... அமெரிக்கா 'அசந்த' நேரம் பார்த்து... அடிமடியில் 'கைவைத்த' சீனா?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் மொத்தமாக முடங்கிக்கிடக்கும் நேரத்தில் சீனா மட்டும் புதுப்புது திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக உலகிலேயே அதிகமான பலி எண்ணிக்கையால் அமெரிக்கா நொந்து போயிருக்கும் நேரத்தில் டிஜிட்டல் கரன்சி திட்டத்தை சீனா அறிமுகம் செய்துள்ளது.

இதனால் கொரோனாவை பயன்படுத்தி உலகை கட்டுக்குள் கொண்டுவரும் திட்டத்தில் சீனா இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதே நேரம் இந்த தகவல்கள் உண்மை என நிரூபிப்பது போல சில விஷயங்களை சீனாவும் முன்னெடுத்து வருகிறது. கடந்த வாரம் உலகின் பல்வேறு நிறுவனங்களை வாங்கிட சீனா திட்டம் தீட்டி அதற்கான வேலைகளில் இறங்கியது. இதைப்பார்த்த உலக நாடுகள் பலவும் தங்களது விதிகளை அவசர, அவசரமாக திருத்தி அமைத்தன.
இந்த நிலையில் தற்போது டிஜிட்டல் கரன்சியை சீனா தற்போது அறிமுகம் செய்திருக்கிறது. உலகம் முழுக்க பிட் காயின்கள் நிறைய உள்ளது. ஆனால் ஒரு நாட்டு வங்கியே அதிகாரபூர்வமாக டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவது இதுதான் முதல்முறை. இந்த டிஜிட்டல் கரன்சி என்பது உங்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்படாது. அதற்கு பதிலாக இந்த டிஜிட்டல் கரன்சிக்கு என்று தனியாக வேலட் ஒன்று அளிக்கப்படும். அதில் இந்த பணத்தை வைத்துக்கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கு டிஜிட்டல் கர்ன்சி எலக்ட்ரானிக் பேய்மெண்ட் (DC/EP) என்று சீனா பெயர் வைத்துள்ளது.
இது சீனா யென் பணத்தின் டிஜிட்டல் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை ஐந்து வருடங்கள் ரகசியாக போட்டு, தற்போது சீனா நிறைவேற்றி உள்ளது என்று கூறுகிறார்கள். (மிகவும் ரகசியமாக இந்த திட்டத்தை சீனா செயல்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது) தற்போது உலகம் முழுவதும் வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலர் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் தற்போது அமெரிக்கா கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் சீனா கரன்சி திட்டத்தை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் கரன்சி நோட்டுகளில் கொரோனா இருக்கும் என்ற அச்சத்தால் சீனா இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
