‘எல்லையில்லா அன்பு வைத்து’... ‘உயிரிழந்த அம்மாவுக்காக’... 'புதிய சாதனை புரிந்த மகன் நெகிழ்ச்சி'!...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Feb 28, 2020 04:29 PM

உறைந்த நீருக்கு அடியில் ஒரே மூச்சில் 180 மீட்டர் ஆழம் வரை நீச்சலடித்து சென்று புதிய சாதனை ஒன்றை படைத்த ரஷ்ய வீரர் தனது தாய் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.

SON OF DIVING LEGEND SET NEW WORLD RECORD IN RUSSIA

ரஷ்யாவைச் சேர்ந்தவர் அலெக்ஸி மோல்ச்சனோவ் (Alexey Molchanov). 33 வயதான இவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். தலைநகர் மாஸ்கோவில் உறைந்த நீருக்கு அடியில் ஒரே மூச்சில் 180 மீட்டர் ஆழம் வரை நீச்சலடித்து சென்றுள்ளார். அதுவும் இந்த சாதனை முயற்சியை வெறும் 3 நிமிடத்தில் நிகழ்த்தி அசத்தியிருக்கிறார் அலெக்ஸி மோல்ச்சனோவ். 

குளிர்ந்த நீருக்கு அடியில் மூச்சுப் பிடித்து நீச்சலடிக்கும் போது ட்ரோன் கேமரா கண்காணிப்பு வளையத்துக்குள், அலெக்ஸியுடன் அவரது அணியினரும் பாதுகாப்புக்காக உடன் சென்றனர். ஏனெனில் இவரது தாய் போல் இவருக்கும் விபரீதம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக.

அலெக்ஸி மோல்ச்சனோவின் தாய் வேறு யாருமல்ல. உலகக் புகழ்பெற்ற ஃபீரி டைவிங்கில் சாதனைப் புரிந்த நடாலியா (Natalia Molchanova) என்பவர் தான். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஸ்பெயினில் 131 அடி ஆழத்தில் நீச்சல் கத்துக்கொடுத்துக் கொண்டிருந்தபோது மர்மமான முறையில் காணாமல் போனார். 3 நாட்கள் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பிறகு அவர் திரும்பாததால், இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது சாதனைக் குறித்து பேசும் அலெக்ஸி மோல்ச்சனோ, தாயின் எல்லையற்ற அன்பும், அவரின் சுயநலமற்ற எங்கள் மீதான அர்ப்பணிப்புக்காகவும், இந்த சாதனையை அவருக்கு சமர்பிக்கிறேன் என்று கண்ணீருடன் கூறினார்.

Tags : #RUSSIA #DIVING