‘பிகினி டிரெஸ்ல வந்தா பெட்ரோல் ஃப்ரீ’.. ‘அலைமோதிய ஆண்கள் கூட்டம்’.. கடைசியில் ஓனர் வச்ச பெரிய ட்விஸ்ட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Nov 18, 2019 08:00 PM

பிகினி உடையணிந்து வந்தால் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பை அடுத்து ஆண்கள் பிகினி உடையில் வந்த சம்பவம் ரஷ்யாவில் நிகழ்ந்துள்ளது.

Petrol pump offered free fuel to people wearing bikinis

ரஷ்யா சமாரா பகுதியில் உள்ள ஒல்வி பெட்ரோல் பங்கில், விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு வித்தியாசமான ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி டூ-பீஸ் எனப்படும் பிகினி உடையணிந்து வந்தால் பெட்ரோல் இலவசம் என்ற ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் அறிவிப்பில் ஆண், பெண் என ஏதும் குறிப்பிடவில்லை. அதனால் ஆண்கள் பிகினி உடையில் பெட்ரோல் பங்கிற்கு படையெடுத்துள்ளனர்.

பல ஆண்கள் பிகினி  உடையில் பெட்ரோல் போட வந்ததால் கூட்டம் குவிந்துள்ளது. இதனால் பங்க் உரிமையாளர் இலவச பெட்ரோல் வழங்கும் சலுகை 3 மணி நேரமாக குறைத்துள்ளார். இந்நிலையில் பிகினி உடையுடன் ஆண்கள் பெட்ரோல் நிரப்பும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #RUSSIA #PETROL #BIKINI #FREEFUEL