‘பயிற்சியின் போது எதிர்பாராதவிதமாக வீரருக்கு நேர்ந்த விபரீதம்’!.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | May 22, 2019 12:55 PM
250 கிலோ எடையை தூக்க முயன்ற பளுதூக்கும் வீரர் கால்கள் முறிந்து கீழே விழுந்த வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த பளுதூக்கும் வீரர் யரோஸ்லாவ் ரடாஷ்கேவிச் (Yaroslav Radashkevich), யுரேஷியன் சாம்பியன் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த யரோஸ்லாவ் 250 கிலோ எடையை தூக்க முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து, 250 கிலோ எடையானது அவரின் தோள்களில் வைக்கப்பட்டவுடன், அவர் அதனை தாங்கி பிடித்தவுடன் கீழே உட்கார்ந்து எழ முயன்றுள்ளார். அப்போது, அளவுக்கு அதிகமான பாரத்தை தாங்காத அவரது கால்கள் சட்டென வளைந்து கீழே விழுந்தார்.
இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இந்நிலையில், அவரது கால்களில் மூன்று இடங்களில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வீரரின் சாதனை முயற்சி சோகத்தில் முடிந்துள்ளது. மேலும், வீரரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.