1972-ல் நடந்த அந்த ட்விஸ்ட்.. எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவுக்கு இப்போ 46 வயசு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 17, 2019 11:34 AM
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தற்போது 46 வயதாகிறது. ஆம், 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்கிற எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக பின்னாளில் அஇஅதிமுகவாக பரிணமித்தது.
1952-ல் நடிகமணி டி.வி நாராயணசாமியால் அண்ணாவிடம் அறிமுகப்படுத்தப்பட்டு, அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் கவரப்பட்டு திமுகவில் இணைந்தவர் எம்.ஜி.ஆர். 1967 தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி, தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றியபோது கூட, அமைச்சர்களின் பட்டியலை ராயப்பேட்டை மருத்துவமனையில் துப்பாக்கிக் குண்டடிப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த எம்.ஜி.ஆருக்கு அண்ணா அனுப்பி கௌரவித்தார்.
பெரியாரிடம் இருந்து தனித்து வந்த சி.என். அண்ணாதுரை, கொட்டும் மழையில், ராபின்சன் பூங்காவில் தனது தலைமையில் திமுகவை உருவாக்கினார், ஆனால் 1972-ல் காலம் அதே சூழ்நிலையை மீண்டும் திமுகவில் இருந்து எம்.ஜி.ஆரை இருந்து வெளியேறவைத்தபோது உருவாக்கியது.
அதன்பின் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் உருவானது. அதிமுக பெற்ற முதல் வெற்றி திண்டுக்கல் பாராளுமன்றத் தேர்தலில்தான். எம்ஜிஆருக்கு பிறகு ஜானகி, ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அதிமுகவின் முதல்வர்களாகியுள்ளனர். தற்போது அவ்வரிசையில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.