'இது என்ன 'டெஸ்ட் மேட்ச்சா'?... 'நீங்க தோத்ததுக்கு இது தான் முக்கிய காரணம்'... மனம் திறந்த பிரபல வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Jul 01, 2019 12:42 PM
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.

உலகக்கோப்பை போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. முதல் 5 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை அடையாமல் வீர நடை போட்ட நிலையில், நேற்றைய தோல்வி இந்திய ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது. அதிலும் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்தும் இந்திய அணி தோற்று விட்டதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் '' இந்திய அணியின் தோல்விக்கு 2 காரணங்கள் தான் பிரதானமாக உள்ளது. ஓவருக்கு 13 ரன்களுக்கு மேல் தேவைபடும் போது தோனி - கேதர் ஜாதவ் ஜோடி சிங்கிள் எடுக்க ஓடி கொண்டிருந்தார்கள். இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
மேலும் பவர் பிளேவில் எடுத்த 28 ரன்கள் என்பது மிகவும் குறைவான ஒன்றாகும். விராட் கோலி, ரோகித் சர்மா ஜோடி இன்னும் கொஞ்சம் அடித்து விளையாடி இருக்க வேண்டும். 338 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் போது பவர் பிளேவில் இன்னும் அதிகம் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் என சவுரவ் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
