இந்த 'பிளட்' குரூப் உள்ளவங்கள... கொரோனா 'அதிகமா' தாக்குதாம்... 'சீன மருத்துவர்கள்' வெளியிட்ட புதிய தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தாக்கியவர்களை வைத்து, சீன மருத்துவமனை ஆராய்ச்சியில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தாக்கிய 2173 பேரை கொண்டு சீனாவில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் ஆராய்ச்சி ஒன்றை செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள், அன்றாட செயல்கள், ரத்த மாதிரி, முந்தைய நோய் தாக்குதல் என்று பல விஷயங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர். அதில் பல புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 65 சதவீதம் பேர் 'ஏ' ரத்த வகையை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் வுஹானில் இறந்த 206 நோயாளிகளில், 85 பேருக்கு (41.26%) 'ஏ' வகை ரத்தம் இருந்துள்ளது. அதே நேரம் இறந்த நோயாளிகளில் 'ஓ' ரத்த வகை குறைவாகவே இருந்து உள்ளது. இது வெவ்வேறு வயது மற்றும் பாலினக் குழுக்களில் கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது 'ஏ' பாசிட்டிவ், 'ஏ' நெகட்டிவ், ‘ஏபி’ பாசிட்டிவ், 'ஏபி' நெகட்டிவ் ஆகிய ரத்த மாதிரிகளை கொண்டவர்களைத்தான் இந்த வைரஸ் எளிதாக தாக்கி உள்ளது. அதே நேரம் 'ஓ' பாசிட்டிவ், 'ஓபி' பாசிட்டிவ், ஓபி நெகட்டிவ் மற்றும் 'ஓ' நெகட்டிவ் வகை ரத்தம் கொண்டவர்களை இந்த வைரஸ் குறைவாகவே தாக்கியுள்ளது.
இதற்கு முன் சார்ஸ் நோய் வந்த போதும் அந்த வைரஸ் 'ஏ' ரத்தப்பிரிவு கொண்டவர்களைத்தான் அதிகமாக தாக்கியது. சார்ஸ் வைரஸும் இந்த கொரோனா குடும்பத்தை சேர்ந்தது தான். இதனால் 'ஏ' ரத்தப்பிரிவு உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்காக 'ஏ' வகை ரத்தப்பிரிவு உள்ளவர்கள் பீதியடைய வேண்டுமென்று அவசியம் இல்லை. அவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே நேரம் 'ஓ' ரத்தப்பிரிவு கொண்டவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அர்த்தமல்ல நீங்கள் அனைத்து பாதுகாப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
Source Link: https://www.medrxiv.org/content/10.1101/2020.03.11.20031096v1