'இந்த' வயசுல உள்ளவங்கள தான்... கொரோனா 'இஷ்டத்துக்கு' தாக்குதாம்... முழுமையான விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் தற்போது 29 பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக லேசான இருமலுடன் இருப்பவர்களை பார்த்தாலே மக்கள் பயந்து நடுங்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் தென்படத் தொடங்கியிருப்பதால் அவசர எண்களை தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் எந்த வயதினரை கொரோனா வைரஸ் அதிகமாக தாக்கும் என்ற விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 9 வயது வரையிலான சிறுவர்கள் யாருமே இல்லை. 10 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் 0.2% பேரும், 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் 0.2% பேரும், 30 முதல் 39 வயது உள்ளவர்கள் 0.2% பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்படைந்தவர்களில் 0.4 % பேர் 40 முதல் 49 வயது உள்ளவர்களாக இருக்கின்றனர். 50 முதல் 59 வயதுள்ளவர்கள் 1.3% ஆகவும், 60 முதல் 69 வயதுள்ளவர்கள் 3.6% பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா பாதித்தவர்களில் 8% பேர் 70 முதல் 79 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவர். அதிகபட்சமாக 80 வயதிற்கு மேற்பட்ட 14.8%பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
