'குடிக்குறதுக்கு காசு தரவே மாட்டேன்...' 'தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில்...' மகன் செய்த காரியம் என்ன தெரியுமா...?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 11, 2020 02:08 PM

குடிக்க பணம் தராததால் அரசு மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The youth who broke the mirror of the state hospital

சென்னை திருவல்லிக்கேணி ஆதாம் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் குலாம்(30). இவரது தந்தைக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், நேற்றிரவு தந்தையை பார்க்க குலாம் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அப்போது குலாம், குடிக்க பணம் வேண்டும் என தனது தாயிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுப்புத் தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்தவர், அருகிலிருந்த மருத்துவமனையின் கண்ணாடியை கையால் குத்தியுள்ளார். இதில் கண்ணாடி முழுவதும் சில்லு சில்லாக உடைந்து சிதறியது.

இதுகுறித்து மருத்துவமனை ஊழியர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து வந்த திருவல்லிக்கேணி போலீசார் குலாம் மற்றும் அவரது நண்பர்கள்மூவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #HOSPITAL #MIRROR