இந்தியாவில் 3-வது 'உயிரைப்' பறித்தது கொரோனா... தொடர்ந்து உயரும் 'பலி' எண்ணிக்கையால்... மக்கள் அச்சம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 17, 2020 12:07 PM

இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு 3-வது இந்தியர் ஒருவர் பலியாகி இருக்கிறார். அவர் கொரோனா வைரஸால் இறந்தது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

India reports Third Coronavirus Death, Details Here!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 125 பேருக்கு கொரோனா பரவி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மருத்துவமனையில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்றுவந்த 64 வயது நிரம்பிய நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தர். இதனால் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 3 ஆக அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து தொடர்ந்து இறப்புகள் ஏற்படுவதால் மக்கள் மத்தியில் லேசான அச்சம் நிலவத்தொடங்கி இருக்கிறது.