கல்யாணமான 5 மாசத்துல மணப்பெண்ணுக்கு நடந்த துயரம்.. போலீசுக்கு உறுத்தலா இருந்த ஒரு விஷயம்.. கடைசியில வெளியான அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவியை கொலை செய்ததாக கணவர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

Also Read | கத்தாரில் களைகட்டிய கால்பந்து உலகக்கோப்பை.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அமைச்சர்.. முழு விபரம்..!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் சாவந்த். இவர் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பிரியங்கா என்பவருக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து, மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார் சாவந்த். இந்நிலையில், கடந்த நவம்பர் 18 ஆம் தேதி பிரியங்கா தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்ததாக அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார் சாவந்த்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ப்ரியங்கா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது கருத்துவேறுபாடு காரணமாக பிரியங்கா தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக சாவந்த் தெரிவித்திருக்கிறார். சாவந்த் வீட்டில் போலீசார் பரிசோதனை நடத்தியதில், பிரியங்கா எழுதியதாக சொல்லப்படும் குறிப்பு ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில், கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இந்த முடிவை எடுத்ததாக பிரியங்கா குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது.
இதனையடுத்து, குடும்ப வன்முறை, உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டுதல் ஆகியவற்றின் அடிப்படையில் சாவந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் பிரியங்காவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதில், பிரியங்காவின் ரத்தத்தில் சில மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதனால், செவிலியராக பணிபுரிந்து வந்த சாவந்த் மீது சந்தேகம் வந்திருக்கிறது.
இதனையடுத்து அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டதில் அவர் பிரியங்காவை விஷ ஊசி செலுத்தி கொன்றது வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து பேசிய காவல் ஆய்வாளர் மனோஜ் யாதவ்,"சாவந்த் தான் பணிபுரிந்துவந்த மருத்துவமனையில் வேலைசெய்யும் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். அவரை திருமணம் செய்யவும் அவர் முடிவெடுத்த நிலையில் அவருக்கு ப்ரியங்காவுடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. தனது காதலியை திருமணம் செய்துகொள்ள நினைத்த சாவந்த், மருத்துவமனையில் இருந்து சில மருந்துகளை எடுத்துச் சென்று பிரியங்கா உடலில் செலுத்தியிருக்கிறார். இதனையடுத்து இது கொலை வழக்காக மாற்றப்பட்டிருக்கிறது. இதுகுறித்து சாவந்திடம் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

மற்ற செய்திகள்
