70 வயது நபரின் மனைவிக்கு 19 வயசு.. "வாக்கிங் போன இடத்தில் பாட்டு பாடி இம்ப்ரஸ் பண்ண 50'ஸ் கிட்..
முகப்பு > செய்திகள் > உலகம்70 வயது நபரை 19 வயது பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | உலகின் 800 வது கோடி குழந்தை.. பிறந்தது எங்கே?.. பெயர் என்ன?? இணையத்தில் வைரலாகும் தகவல்!
உண்மையான காதலுக்கு பணமோ, வயதோ அல்லது அந்தஸ்தோ எதுவும் ஒரு பொருட்டாக இருக்காது என பலரும் கூறுவார்கள். அதனை நிஜமாக்கும் வகையில் ஒரு சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் பகுதியை சேர்ந்தவர் லியாகத் அலி. இவருக்கு தற்போது 70 வயதாகிறது. இவர் தினந்தோறும் காலையில் வாக்கிங் செல்வதாக தகவல் தெரிவிக்கிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த 19 வயதாகும் சுமைலா என்ற இளம்பெண்ணும் வாக்கிங் வருவதை வழக்கமாக கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து, சுமைலாவின் மீது விருப்பம் கொண்ட லியாகத் அலி, அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தவும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கடுத்து, சுமைலா முன் பாடல்களை பாடியும் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார் லியாகத். இதனால், மெல்ல மெல்ல சுமைலாவுக்கும் வயது என்ற விஷயத்தை தாண்டி லியாகத் அலி மீது காதல் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், சமீபத்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தன்னை விட சுமார் 51 வயது மூத்த நபர் மீது காதல் உருவான நிகழ்வு குறித்து பேசிய இளம்பெண் சுமைலா, "காதலில் ஒருவர் வயது பார்ப்பதில்லை. அது அப்படி தான் நடந்தது. லியாகத் அலி மீது உருவான காதல் குறித்து எனது பெற்றோர்களுக்கு தெரிந்ததும் அவர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதன் பின்னர் அவர்களை எங்களால் சமரசம் செய்ய முடிந்தது" என கூறினார்.
19 வயது பெண் மீது காதல் உருவாகி அவரை திருமணமும் செய்து கொண்டது குறித்து பேசி இருந்த லியாகத் அலி, தனக்கு இளமையான இதயம் என குறிப்பிட்டு, "காதல் என வந்து விட்டால் அதற்கு வயது ஒரு தடையே இல்லை. ஒருவர் வயதானவரா அல்லது இளமையானவரா என்ற கேள்விக்கே இடம் இருக்காது. சட்டப் பூர்வமாக திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் யார் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்" என்றும் கூறி உள்ளார்.
அதே போல, லியாகத் - சுமைலா ஜோடி மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருவதாகவும் தெரிகிறது. மேலும், தனது மனைவியின் சமையலை மிகவும் விரும்புவதாகவும், இதனால் திருமணமானதில் இருந்து உணவகங்களில் சாப்பிடுவதை நிறுத்தி விட்டதாகவும் லியாகத் தெரிவித்துள்ளார். மேலும், வயது பற்றி யார் என்ன சொன்னாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள போவதில்லை என்றும் இந்த ஜோடி முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பிரபல யூடியூபர் ஒருவர், வித்தியாசமான ஜோடிகளின் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது அவர் வெளியிட்ட லியாகத் - சுமைலா ஜோடியின் வீடியோவும் அதிகம் நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.
Also Read | ஆட்டோவில் கிடந்த Airpods.. கரெக்ட்டான ஆள் கிட்ட சேர்க்க ஆட்டோ ஓட்டுநர் Use செஞ்ச டெக்னிக்!!..

மற்ற செய்திகள்
