"பைக் வாங்க பணம் தராம போனதுக்கா இப்டி பண்ணாரு?".. ஆத்திரத்தில் கணவர் செஞ்ச விஷயம்.. மருத்துவமனையில் மனைவி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்டம், நம்கும் என்னும் பகுதியை சேர்ந்தவர் அமீர் கான். இவரது மனைவி பெயர் ஹீனா பர்வீன்.

இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழலில், தான் பைக் ஒன்றை வாங்க வேண்டும் என்றும், இதற்காக தனது மாமனாரிடம் இருந்து சுமார் 70,000 ரூபாயை வாங்கி வர வேண்டும் என்றும் மனைவி ஹினாவை அமீர் கான் வற்புறுத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
வற்புறுத்தி வருவதுடன் மட்டுமில்லாமல், வீட்டிற்கு போய் பணத்தை வாங்கி வரும்படி மனைவியை அமீர் கான் துன்புறுத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. கணவரின் தொல்லையை பொறுத்துக் கொள்ள முடியாத ஹினா, தனது வீட்டிற்கு சென்று தந்தையிடம் கணவர் பைக் வாங்க பணமும் கேட்டுள்ளார். அதற்கு ஹினாவின் தந்தை விரைவில் பணத்தை ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தனது கணவர் வீட்டிற்கு வந்த ஹினாவிடம், பைக் வாங்க கேட்ட 70 ஆயிரம் ரூபாய் பணம் எங்கே என்றும் அமீர் கான் கேட்டுள்ளார். பணத்தை விரைவில் கொடுப்பதாக தந்தை தெரிவித்ததை கணவரிடமும் ஹீனா கூறி உள்ளார். இதனைக் கேட்டதும் அமீர் கான் ஆத்திரம் அடைந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், மனைவி ஹினாவுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
வாக்குவாதம் முற்றவே, வீட்டில் ஏற்கனவே இருந்த ஆசிட்டை தனது மனைவி ஹினா முகத்தில் அமீர் வீசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆசிட் பட்டதால் வலியில் அலறித் துடித்த ஹினாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை சேர்த்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு மத்தியில், அமீர் கான் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
மருத்துவமனையில் ஹினாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆசிட் வீசி விட்டு தப்பிச் சென்ற அமீரையும் தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
