10 வருஷத்துக்கு முன்னாடி இறந்த மூதாட்டி.. இத்தனை நாள் கழிச்சு உடலை தோண்டி வெளிய எடுத்தப்போ.. குடும்பத்தையே உறைய வெச்ச சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மூதாட்டி உடலை குழியில் இருந்து தோண்டி எடுத்த சமயத்தில், அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த மக்களும் உறைந்து போகும் படியான சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.
![old woman body exhumes after 10 years by family shocked old woman body exhumes after 10 years by family shocked](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/old-woman-body-exhumes-after-10-years-by-family-shocked.jpg)
டொமினிக்கன் குடியரசில் வாழ்ந்து வந்த Margarita Rosario என்ற மூதாட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 86 ஆவது வயதில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் மர்கரிட்டாவின் குடும்பத்தினர் ஒரு முடிவையும் எடுத்துள்ளனர். அதாவது, மர்கரிட்டாவின் உடலை தோண்டி எடுத்து வேறொரு இடத்தில புதைக்கவும் திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதற்காக, 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து புதைக்கப்பட்ட மர்கரிட்டாவின் உடலை அவரது குடும்பத்தினர்கள் தோண்டி எடுத்துள்ளனர். அந்த சமயத்தில் தான், அவர்களுக்கு கடும் அதிர்ச்சியும், அதே வேளையில் ஆச்சரியமும் ஒரு சேர காத்திருந்தது. ஏனென்றால், மர்கரிட்டாவின் உடல் புதைக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆன பிறகும் அவரது தலைமுடி கொட்டாமல் அப்படியே இருந்தது என்பது தான்.
இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் மர்கரிட்டாவின் உடலில் உள்ள தோலும் பெரிய அளவில் பாதிக்கப்படாமல், அவர் புதைக்கப்படும் போது எந்த உருவத்தில் இருந்தாரோ அப்படியே தான் தற்போதும் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, மர்கரிட்டாவின் உடலை நிற்க வைக்கக் கூட முடிந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.
இது தொடர்பாக பேசும் அவரது குடும்பத்தினர், மர்கரிட்டா உயிருடன் இருக்கும் போதே தான தர்மங்கள் நிறைய செய்ததாகவும், மற்றவர்கள் மத்தியில் நல்லவர் என பெயரும் எடுத்து, இரக்கம் மற்றும் நற்குணம் கொண்டவராக வாழ்ந்து வந்ததால் தான், உடல் சேதமடையாமல் இருந்தது என்றும் குடும்பத்தினர் நம்புகின்றனர்.
மறுபக்கம், ஒருவர் இறந்த உடனேயே அவருடைய உடலை பதப்படுத்துவதால் அது சேதமடையாமல் இருக்க வாய்ப்புள்ளது எனவும் இது பற்றி தெரிந்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். காரணம் எதுவாக இருந்தாலும் 10 ஆண்டுகளுக்கு பிறகு, தோண்டி எடுத்த பெண்ணின் உடல் பற்றிய செய்தி, தற்போது பலரையும் மிரண்டு போக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)