"பிரசவ வலியில் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கும்போது".. சுட்டுக் கொல்லப்பட்ட இளம் தாய்க்கும் குழந்தைக்கும் நடந்த கொடூர சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்தென் ஆப்பிரிக்காவில் 3 குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண் தனது வீட்டு தோட்டத்தில் உள்ள ஷெட் ஒன்றில் நான்காவது குழந்தையை பிரசவிப்பதற்காக காத்திருந்தார்.

ஷைதா நாதன் என்கிற 32 வயது உடைய அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் நேரத்தில் திடீரென அங்கு நுழைந்த மர்ம நபர்கள் இருவர் அந்த பெண்ணை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவ உதவி குழுவினர் அங்கு வரவழைக்கப்பட்ட போதிலும் அவர்களால் தாயையும் குழந்தையையும் காப்பாற்ற முடியவில்லை. உண்மையில் அந்த மர்ம நபர்கள் ஷைதாவின் மூத்த மகன்கள் இருவரை கொல்வதற்காக அங்கு வந்ததாகவும் ஆனால் துப்பாக்கிச் சூட்டில் ஷைதாவும் குழந்தையும் இறந்து போனதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஷைதாவின் மூத்த மகன்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களது நிலைமை குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
