"50 பெண்களுக்கான சாதனை விருது!".. 'பட்டியலில்' கலக்கும் 5 'இந்திய' வம்சாவளி 'பெண்கள்'!.. 'யாருயா இவங்க?'
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் சிறப்பு செயல்பாட்டுக்கான 2020-ஆம் ஆண்டு கொடுக்கப்படும் ஜீரோ கார்பன் விருது பெறும் 50 பெண் இன்ஜினியர்களின் பட்டியலில், 5 இந்திய வம்சாவளி பெண்கள் இடம் பெற்றுள்ளதை அடுத்து அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்த பட்டியலில் பிரிட்டனின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இன்ஜினியர் சித்ரா சீனிவாசன் இடம் பிடித்துள்ளார். இவர் அணுசக்தி ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அறிவியல் மையத்தில் பொறுப்பில் உள்ளவர். இதுபற்றி பேசிய அவர் இந்த சாதனை தன்னை ஊக்குவிப்பதாக தெரிவித்துளார்.
இதேபோல் நில அதிர்வு துறையில் பணிபுரியும் பர்னாலி கோஷ் மற்றும் காலநிலை மாற்ற நிபுணர் அனுஷா ஷா ஆகியோரும் இந்த 50 பெண்களின் பட்டியலில் இடம் பிடித்த இந்திய வம்சாவளி பெண்கள் ஆவர்.
இவர்களை அடுத்து போக்குவரத்துப் பிரிவில் பணிபுரியும் ரிது கார்க் மற்றும் மூத்த இன்ஜினியர் குசும் திரிகா உள்ளிட் இந்திய வம்சாவளி பெண்களும் இந்த உயரிய விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.