"சீனாவுக்கு முன்பே இந்த நாடுகளில் கொரோனா தொற்று இருந்திருக்கா?".. ஷாக் தரும் ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் தொடங்கி, பின்னர் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தீவிரமுடன் இந்த வைரஸ் பரவத் தொடங்கி பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இத்தாலியின் மிலன் மற்றும் தூரின் நகரங்களில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு நீரை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் வைரஸ் பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்படுவதற்கு முன்பே வடக்கு இத்தாலியில் வைரஸ் பரவி வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வடக்கு இத்தாலியில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து சென்ற 2019ம் ஆண்டு அக்டோபர் முதல் 2020ம் ஆண்டு பிப்ரவரி வரை 40 கழிவுநீர் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இத்தாலிய தேசிய சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், டிசம்பர் 18ந்தேதி மிலன், தூரின் நகரில் எடுத்த மாதிரிகளில் சார்ஸ் கோவிட் வைரஸ்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த வாரம் வெளியாலகாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ஆய்வு முடிவுகள், இத்தாலியில் வைரஸ் பரவலுக்கான தொடக்கம் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவக் கூடும் என அந்த அமைப்பின் ஆய்வாளர்களில் ஒருவரான கிஸ்செப்பினா லா ரோசா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பல நாடுகளும், கழிவுநீர் மாதிரிகளை சோதனை செய்ய தொடங்கி உள்ளதுன. இதேபோல் கடந்த மே மாதத்தில் பிரான்ஸ் நாட்டில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில், டிசம்பர் 27ந்தேதிக்கு முன்பே நபர் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. துல்லியமாகச் சொன்னால், இது, கொரோனா வைரஸ் பாதித்த முதல் நபரை பிரான்ஸ் நாடு உறுதி செய்வதற்கு, ஒரு மாதத்திற்கு முன்பாகவே உண்டான சம்பவம் என தெரிய வந்துள்ளது.

மற்ற செய்திகள்
