"உயிரோட எழுந்து வாம்மா?".. 'அம்மாவின் பிரேதத்துடன்' வீட்டுக்குள்ளேயே வாழ்ந்த 'டாக்டர் மகள்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செருவலச்சேரியைச் சேர்ந்தவர் கவிதா என்கிற ஹோமியோபதி டாக்டர்.

இவருடைய அம்மாவின் பெயர் ஓமனா. இருவரும் ஒரே வீட்டில், ஒரே அறையில் தனியாக வசித்து வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்புதான் தாயும் மகளும் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியதாக தெரிகிறது. இதனால் உறவினர்களும் இவர்களுடன் புழங்குவதை நிறுத்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் ஓமனாவுக்கு சர்க்கரை வியாதி இருந்துள்ள நிலையில், அவருடைய காலை வெட்டி எடுத்துள்ளனர். இதனால் படுத்த படுக்கையாக பலகாலம் இருந்த ஓமனா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இறந்துள்ளார். ஆனால் அவர் இறந்த விஷயம் யாருக்குமே தெரியவில்லை. ஆம், கவிதா இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை. தாயின் சடலத்தை அந்த அறைக்குள்ளேயே வைத்திருந்த கவிதா, “எப்படியும் கடவுள் வந்து தன் அம்மாவை உயிரோடு எழுப்பி விடுவார்” என்கிற நம்பிக்கையில் ஜெபம் செய்து கொண்டே இருந்துள்ளார்.
இப்படி 3 நாட்கள், ஓமனாவின் சடலத்துடன் கவிதா இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் 3 நாளாகியும் அம்மா உயிர்த்தெழுந்து வராததால் சாப்பாடு, தண்ணீர் கூட இல்லாமல் பிரார்த்தனை செய்தபடி கவிதா இருந்துள்ளார். 3 நாள் கழித்து கவிதா வழக்கமாக பயணம் செய்யும் ஆட்டோகாரர், அந்த பக்கம் வரவே அவருக்கு இந்த விஷயம் தெரிந்து, அவர் பதறி அடித்துக்கொண்டு போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளார். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் ஓமனாவின் சடலத்தை மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டாக்டராக இருந்த போதிலும் கவிதா இவ்வாறு நடந்து கொண்டுள்ளது பலருக்கும் வியப்பை உண்டாக்கியுள்ளது.

மற்ற செய்திகள்
