கல்யாணம் பண்ண போட்டோவ... 'ஃபேஸ்புக்'ல போட்ருக்காங்க... அத வெச்சு செஞ்ச 'நெட்டிசன்'கள்... கூலாக அதிரடி 'பதில்' கொடுத்த காதல் 'ஜோடி'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Jun 26, 2020 07:12 PM

கொல்கத்தாவை சேர்ந்த அர்னேஷ் மித்ரா மற்றும் எக்தா பட்டாச்சார்யா ஆகிய இருவரும் பள்ளி பருவத்திலிருந்தே ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் படித்து, பட்டமும் பெற்ற நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து தங்களது திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட, அது சில நெட்டிசன்களால் கிண்டல் செய்யப்பட்டது.

People trolled wedding souple and they replies in a cool manner

காரணம், அந்த புகைப்படத்தில் மணமகன் அர்னேஷ் மித்ரா உடல் பருமனுடன் இருப்பதை முன்பின் தெரியாத பலரும் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். அதே போல, மேலும் சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று மீம்ஸ்களை பதிவிட்டனர். பலர் இதனை கிண்டல் செய்த நிலையில், ஒருசிலர் மட்டுமே இதனை தவறு என கண்டித்தனர். 11 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் புகைப்படம் இப்படி கிண்டல் செய்யப்படும் மீம்ஸ்கள் எக்தா கவனத்துக்கு செல்ல அவர் மிகவும் கோபமடைந்து குறிப்பிட்ட அந்த மீம்ஸ் பேஜ் மீது புகாரளிக்க முடிவு செய்துள்ளார்.

ஆனால், அர்னேஷ் மித்ராவோ புகார் எதுவும் அளிக்க வேண்டாம். எனக்கு கிடைத்ததை போல அழகான மனைவி அவர்களுக்கு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தான் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட எக்தா, 'நான் அவரை காதலிக்க ஆரம்பித்த நாள் முதல் இது போன்ற கேலியும் கிண்டல்களும் வந்து கொண்டே தான் இருக்கின்றன. ஒருவரின் உடலை பார்க்கும் இந்த சமூகம், அவரது மனதை பார்க்க தவறி விடுகிறது' என குறிப்பிட்டிருந்தார். அதே போல அர்னேஷ் மித்ராவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், 'இந்த புகைப்படத்தை கிண்டல் செய்த அனைவருக்கும் நன்றி. இவ்வளவு அழகான பெண் என்னுடைய மனைவி என்பதை என்னால் கூட நம்ப முடியவில்லை. அவர் குழந்தை பருவத்திலிருந்தே என்னுடைய தோழி, இப்போது என்னுடைய மனைவி' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உங்களை போன்று மீம்ஸ் பேஜ்கள் லைக் வாங்க கஷ்டப்படுவது தனக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 11 ஆண்டு காதல் செய்து பின் திருமணம் செய்து கொண்டவர்களை உடல்ரீதியாக கேலி செய்வது என்பது நமது சமூகத்தின் நிலையையே எடுத்துரைக்கின்றது.

Tags : #TROLL #LOVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. People trolled wedding souple and they replies in a cool manner | India News.