“உனக்கும் கொரோனா இருந்தா.? நீ வீட்டுக்கு வராதம்மா!”.. பெற்ற 'தாயை' விரட்டிவிட்ட 'மகன்கள்'!.. 'சோறு, தண்ணி' இல்லாமல் 'சாலையில்' வசிக்கும் 'சோகம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் உள்ள கிஷான் நகர் பகுதியை சேர்ந்தவர் 65 வயதான சியாமளா.

தன்னுடைய மகன்களுடன் தெலுங்கானாவில் வசிக்கும் சியாமளா இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் மகாராஷ்டிராவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர் ஊரடங்கு காரணமாக அவரால் சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து ஊரடங்கு தளர்வு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் ரயில் மூலமாக கரீம்நகர் வந்தடைந்த சியாமளா தனது மகன்களுட தான் வசிக்கும் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் மகாராஷ்டிர மாநிலத்தில்தான் ஏற்கனவே இந்தியாவிலேயே அதிக அளவு கொரோனா தொற்று இருப்பதை காரணமாக கூறிய மகன்கள், “உனக்கும் கொரோனா தொற்று இருக்கலாம்” என்று சொல்லி, “எனவே நீ வீட்டுக்குள் வரக்கூடாது!” என்று சியாமளாவை அனுமதிக்க மறுத்து விரட்டியுள்ளனர்.
அவருடைய மகன்களின் இந்த செயலால் வேறு எங்கும் செல்ல வழியின்றி வீதியில் வசிக்கும் சியாமளா உணவு, குடிநீர் ஆகிவற்றுக்காக தினமும் தவித்து வருகிறார். அவருடைய நிலையை பார்த்த உள்ளூர் மக்கள் அவருக்கு உணவு முதலியவற்றை வாங்கிக் கொடுத்து உதவி வருகின்றனர்.
கொரோனா தன்னுடைய தாய்க்கு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதும் அவருடைய மகன்கள் அந்தத் தாயை பரிசோதனைக்கு அழைத்து செல்வதை விட்டுவிட்டு, அவரைப் புறக்கணித்து வெளியே அனுப்பியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்ளூர் மக்கள் கூறி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
