“இரவில் தூங்கவே முடியல.. சுத்தி இருக்குறவங்க பத்தி கவலை இல்லை.. மன ஆரோக்கியம்தான் முக்கியம்!".. வாடிக்கையாளரை சந்திக்க லாக்டவுன் விதிகளை மீறி, செல்லும் பாலியல் தொழிலாளர்!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் ஹேரோகேட் எனும் இடத்தில் வசிக்கும் மோனிகா ஹோல்ம்ஸ் என்கிற 34 வயது பெண் இந்த லாக்டவுனிலும் தன்னால் உறவு கொள்ளாமல் இருக்க முடியாது என்று கூறி, வாடிக்கையாளர் நண்பரை சந்தித்து வருவதாக வெளிப்படையாகவே கூறி அதிரவைத்துள்ளார்.

இங்கிலாந்தில் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, தற்போது சில தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான இப்போதைய ஆயுதங்களாக சமூக இடைவெளியும், பொதுமுடக்கமே அவசியமானதாக உள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், பாலியல் தொழிலாளரான மோனிகா ஹோல்ம்ஸ் தன்னால் உறவுகொள்ள முடியாமல் இரவில் தூங்க இயலவில்லை என்றும், மன ஆரோக்கியத்திற்காக, லாக்டவுனையும் பொருட்படுத்தாமல், தன்னுடன் கடைசியாக அறிமுகமான வாடிக்கையாளர் நண்பரை தினமும் சந்திக்க செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுற்றத்தார் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி தனக்கு கவலை இல்லை என்றும், இந்த லாக்டவுனை பொருட்படுத்தாமல் மனதுக்கு பிடித்தவற்றைச் செய்வதில் தன்னுடன் பலரும் ஒத்துப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
