செம 'ஷாக்'... 20 போலீஸ்க்கு 'ஸ்கெட்ச்' போட்டுருந்தோம்... விசாரணையில் 'அதிரவைத்த' கொலையாளிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jan 16, 2020 11:52 PM

கன்னியாகுமரி களியக்காவிளையில் கடந்த சில நாட்களுக்கு எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் அப்துல் சமீம், தவுபீக் என்னும் இருவரை கைது செய்து, குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

SSI Wilson Case: Police Revealed some shocking information

இந்தநிலையில் விசாரணை அதிகாரி ஸ்ரீநாத் இதுகுறித்து கூறுகையில், '' 20 போலீசாரை சுட்டுக் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. கூட்டாளிகளை கைது செய்ததால் காவல்துறையை பழிவாங்க பயங்கர திட்டம் தீட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அப்துல் சமீம் மீது மட்டும் 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன,'' என்றார்.

இந்த தகவல் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து குற்றவாளிகள் இருவருக்கும் வேறு ஏதேனும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags : #POLICE