'நாம தான் நம்பர் ஒன்!'... 'ரவுடிகளின் வெறியாட்டம்'... 'போலீஸ் அதிரடி'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 16, 2020 06:32 PM

மது போதையில் இருவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு, ஊருக்குள் அடாவடி செய்து வந்த ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

Police arrests murders of 3 men who were drunk in Tanjore

தஞ்சாவூரில், வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்தவர், சக்திவேல். அவரும் அவர் நண்பர்களான செபஸ்டியன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், நேற்று டாஸ்மாக்-இல் மது அருந்தியுள்ளனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், சூர்யா, வெங்கடேசன் ஆகியோரும் மது அருந்தியுள்ளனர். இந்நிலையில், இரு தரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், செல்வக்குமாரும் அவரது நண்பர்களும், சக்திவேல் தரப்பினரைக் அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த சம்பவத்தில், சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் நண்பர்கள் இருவரும், சிகிச்சைப் பலனின்றி இன்று மருத்துவமனையில் மரணமடைந்தனர்.

மேலும், கொலை செய்த செல்வக்குமார், சூர்யா மற்றும் வெங்கடேசன் ஆகியோர், "இது போல பல சம்பவங்கள் இனிமேல் நடக்கும். அப்போது தான் நம்ம நம்பர் ஒன் ஆக இருக்க முடியும்" என்று கத்திக் கொண்டே ஊருக்குள் சென்றுள்ளனர்.

இதையடுத்து, ஊர் பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மது போதையில் இருந்த போது, கஞ்சாவும் பயன்படுத்தியதால், போதை தலைக்கேறி, இத்தகைய குற்றச் செயலை அவர்கள் செய்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #MURDER #TANJORE #POLICE