இளம்பெண்ணை பாலியல் 'வன்கொடுமை' செய்து... செங்கலால் முகத்தை 'சிதைத்த' கொடூரர்கள்... விழுப்புரத்தில் பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jan 17, 2020 12:49 AM

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அவரை கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Young Women murder in Villupuram, police investigate

விழுப்புரம்-புதுவை சாலையில் ரெயில்வே குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தாலும், வீடுகள் மோசமான நிலையில் இருப்பதால் 10 குடும்பங்களே வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்குள்ள பாழடைந்த கட்டிடமொன்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரைநிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். மர்ம மனிதர்கள் யாரோ அவரை கற்பழித்து கொலை செய்துவிட்டு, அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக செங்கலால் அவரது முகத்தை சிதைத்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.