வற்றிய நீர்.. துருபிடித்து கிடந்த 'பேரல்'.. உள்ள என்ன தான் இருக்குன்னு பாத்தப்போ செம ஷாக்.. விசாரணையில் போலீஸ்.. 50 வருச மர்மம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது வெப்ப நிலை கடுமையாக வாட்டி வரும் நிலையில், நீர் நிலைகள் பலவும் வற்றி போய் வருகிறது.
Also Read | "என்னது, அவருக்கு 3 கிட்னி இருக்கா??".. உச்சகட்ட குழப்பத்தில் மக்கள்.. பின்னணி என்ன??
ஐரோப்பா முழுவதும் வெப்ப அலையின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். வெப்பத்தினை தவிர்க்க, அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும், பிரிட்டனில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சி ஏற்பட்டிருக்கிறது. முக்கிய நீர்நிலைகளில் நீர்ப்பிடிப்பின் அளவு கணிசமான அளவில் குறைந்திருக்கிறது.
இப்படி நீரின் அளவு, பல ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குறைந்து வரும் காரணமாக, மக்களுக்கு அறியாத பல வினோத மற்றும் ஆச்சரிய விஷயங்கள், தற்போது வெளியாகி வருகிறது. அடுத்தடுத்து சில இடங்களில், நீருக்குள் மூழ்கி போன கிராமம் குறித்தும் தகவல்கள் தெரிய வந்தது. மேலும், 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் கால்தடங்களும் வெளியே தெரிந்து, அதிகம் ஆச்சரியத்தை உண்டு பண்ணி இருந்தது.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக, அமெரிக்காவின் Lake Mead என்னும் பகுதியில் நீர் வற்றியதன் காரணமாக தெரிய வந்த விஷயமும், அது பற்றி தற்போது தெரிய வந்த காரணமும் கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.
Lake Mead பகுதியில், கடந்த மே மாதத்தில், நீர் வற்றிய போது, சிதைந்த நிலையில் சில மனிதர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. அப்படி ஒரு சூழ்நிலையில் தான், இது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு, தற்போது அதில் ஒருவர் யார் என்பது பற்றியும் தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு, Lake Mead பகுதியில், Thomas Erndt என்ற நீச்சல் வீரர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
அதன் பின்னர், அவரது உடல் கூட கிடைக்காத நிலையில், தற்போது கிடைத்துள்ள உடல் பாகங்களைக் கொண்டு DNA உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை மேற்கொண்ட போது, அது தாமஸ் தான் என்பதும் உறுதியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
Thomas உடல் தவிர, மற்ற சிலரின் சிதைந்த மனிதர்களின் உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு உடல், அரித்து போயிருந்த பேரல் ஒன்றுக்குள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த உடலில் துப்பாக்கி குண்டு காயம் இருந்ததாக கூறப்படும் நிலையில், அந்த வழக்கை கொலை வழக்காகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், 70, 80 களில் வாழ்ந்த நபரின் உடல் பாகங்களாக இருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கின்றனர்.
இதற்கு காரணம், அந்த உடல் பாகங்களுடன் இருந்த ஆடைகள், 1970 காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது தான். Lake Mead பகுதியில், கடந்த மூன்று மாதத்தில், இது போன்ற மனிதர்களின் சிதைந்த உடல் பாகங்கள், மூன்று முறைக்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டுளளதால், அவை அனைத்தும் ஒரே நபருடைய உடல் பாகங்களா அல்லது வெவ்வேறு நபர்களுடையதா என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும், நீரில் பல ஆண்டுகள் கிடந்து அழுகிய நிலையில் இருப்பதால், நபர் குறித்த விவரத்தையும் அறிந்து கொள்ள கடினமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.