"53 வருசத்துக்கு முன்னாடி தொலைஞ்சது'ங்க.." ஏரி நீரில் கிடந்த பொருள்.. "இத்தனை மைல் தாண்டி வரணும்னு விதி இருந்துருக்கு.."
முகப்பு > செய்திகள் > உலகம்நாம் அதிகம் நேசிக்கும் ஒரு பொருள், நமது கையில் இருக்கும் போதே திடீரென தொலைந்து விட்டால், நமது மனதுக்குள் மிகப் பெரிய ஒரு வேதனை உருவாகும்.
Also Read | தவறாக போடப்பட்ட ஊசி.. 22 வருசத்துக்கு அப்புறம் வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்பு..
அந்த வேதனை மனதில் இருந்து மாறவே, குறுகிய காலம் ஆகலாம். அந்த வகையில், பெண் ஒருவருக்கு அதிகம் விருப்பம் உள்ள பொருள் ஒன்று தொலைந்து போக, பின் நடந்த சம்பவம், அவருக்கு இன்ப அதிர்ச்சியாகவே அமைந்துள்ளது.
டானா ஸ்காட் லாப்லின் என்ற பெண்ணுக்கு திருமணமாகி, ஆறு குழந்தைகளுடன் உள்ளனர். இவர் தற்போது அலபாமாவில் உள்ள போலேய் என்னும் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 1969 ஆம் ஆண்டு, பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, ஏரி ஒன்றில் நீந்தி உள்ளார். அந்த சமயத்தில், அவர் கையில் இருந்த மோதிரம் ஒன்று நீரில் தொலைந்து போயுள்ளது. அதன் அருகே, பல இடங்களில் தேடிப் பார்த்தும் லாப்லினின் மோதிரம் கிடைக்கவில்லை. மேலும், அவர் அதிகம் வருத்தப்பட்டதுடன் மட்டுமில்லாமல், அழவும் ஆரம்பித்துள்ளார். ஏனென்றால், அந்த மோதிரத்தை அவர் அணிய ஆரம்பித்து சுமார் ஒரு மாத காலம் தான் ஆகி இருந்தது.
இப்படி மோதிரம் தொலைந்து சுமார் 53 ஆண்டுகளுக்குப் பிறகு, அசத்தலான ஒரு தகவல், டானா ஸ்காட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது. கலிஃபோர்னியாவில் இருந்து அவர் அலபாமாவிற்கு மாறி 50 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், டிரக் மற்றும் கெல்லி என்ற தம்பதி, கலிபோர்னியாவில் இருந்து டானாவை அழைத்துள்ளனர். டானா ஸ்காட் தனது மோதிரத்தை தொலைத்த ஏரி பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மோதிரம் ஒன்றை கண்டெடுத்ததாகவும் அவர்கள் டானா ஸ்காட்டிடம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மீன் பிடிக்க சென்ற போது மோதிரம் ஒன்றை கண்டெடுத்ததாகவும், இது தொடர்பான புகைப்படத்தை facebook பக்கத்தில் பகிர்ந்த போது, அலபாமா பகுதியில் இருந்து, ஸ்காட்டின் உறவினர்கள் அதனை அடையாளம் கண்டு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
53 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மோதிரம் கிடைத்ததை அறிந்த ஸ்காட் லாப்லின், இன்ப அதிர்ச்சியில் மூழ்கி போனார். அதே போல, டிர்க் மற்றும் கெல்லி தம்பதிகளுக்கு தனது நன்றிகளை தெரிவித்தவர், மோதிரம் கிடைத்தது என்னால் நம்பவே முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், டானா ஸ்காட்டின் கணவரும் இதை அறிந்து அதிர்ந்து போனதாக தெரிவித்துள்ளார்.
பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால், டானா ஸ்காட் இருப்பதால், விரைவில் அவர் தொலைத்த மோதிரம், மெயில் மூலம் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read | "இறந்த உடலை தோண்டி எடுத்ததுக்கு அப்புறம்.." மழை வர வைக்க வினோத சடங்கு.. பரபரப்பை உண்டு பண்ணும் கிராம மக்கள்