தயார் நிலையில் 'செம்பரம்பாக்கம் ஏரி'!.. 'இந்த' பகுதி மக்கள் எல்லாரும் தயவு செஞ்சு வெளியேறுங்க... அடையாறு ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை!.. தமிழக அரசு அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை அடையாற்றின் இருகரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தமிழக அரசு வேண்டுகோள்.

நண்பகல் 12மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட உள்ளதால் அடையாற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்க வாய்ப்பு.
சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும் வெளியேற அறிவுறுத்தல்.
வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றம் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும் வெளியேற அறிவுறுத்தல்.
சென்னை மண்டலம் 10,11,12 மற்றும் 13ல் உள்ள கானு நகர், சூளைப்பள்ளம் வாசிகள் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தல்.
சென்னை அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம் மக்கள் அருகே உள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தல்.
சென்னையில் 169 வெள்ள நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளன.
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் தாழ்வான பகுதி மக்களை நிவாரண முகாம்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
மேலும், அடையாறு ஆற்றில் விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி வரை நீர் செல்லும் திறன் உள்ளதால் அச்சம் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
