"என்னது, அவருக்கு 3 கிட்னி இருக்கா??".. உச்சகட்ட குழப்பத்தில் மக்கள்.. பின்னணி என்ன??
முகப்பு > செய்திகள் > இந்தியாஅவ்வப்போது, இணையத்தில் ஏதாவது வினோதமான தகவல்கள் அல்லது செய்திகள் வெளியாகி, படிக்கும் பலரையும் இது எப்படி சாத்தியமாகி இருக்கும் என்ற குழப்பத்தையும் கேள்விகளையும் உண்டு.பண்ணும்.
பொதுவாக, ஒரு நபருக்கு இரண்டு கிட்னி இருப்பது என்பது இயற்கையான ஒன்று தான். ஆனால், கான்பூர் பகுதியை சுஷில் யாதவ் என்ற நபருக்கு மூன்று கிட்னி இருப்பது தான் தற்போது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
52 வயதாகும் சுஷில் யாதவ், கடந்த 2020 ஆம் ஆண்டின் போது, பித்தப்பை அறுவை சிகிச்சைக்காக அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் தான், சுஷிலுக்கு மூன்று கிட்னி இருப்பது தெரிய வந்துள்ளது. ஆரம்பத்தில், இதனை பெரிதாக எடுத்து கொள்ளாத சில மாதங்கள் கழித்து மீண்டும் அல்ட்ரா சவுண்ட் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவருக்கு மூன்று சிறுநீரகங்கள் இருப்பது உறுதியும் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மூன்று சிறுநீரகங்கள் இருப்பது சுஷிலுக்கு தெரிந்தாலும், இதுவரை அதன் காரணமாக எந்தவித உடல் பிரச்சனைகளும் அவருக்கு ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மற்றவர்களை போல தான், தனது வாழ்க்கையை தான் வாழ்ந்து வருவதாகவும் சுஷில் யாதவ் கூறி உள்ளார்.
ஏற்கனவே, தனது கண்களை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்துள்ள சுஷில் யாதவ், தனக்கு மூன்று கிட்னிகள் இருப்பது தெரிந்ததும் தன்னால் ஒருவருக்கு தானம் செய்ய முடிந்தால், அதை செய்யவும் தயாராக இருப்பதாக கூறி உள்ளார். முன்னதாக, அவர் இறந்த பின்னர் உடல் உறுப்புகளை தானம் செய்யவும் அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், ஒரு கிட்னியுடன் கூட ஒருவர் உயிர் வாழ முடியும் என்பது மருத்துவத்தில் நிரூபிக்கப்பட்டுள்ள விஷயமாகும். சிலருக்கு இரண்டு கிட்னிகளும் சேதமடைந்தால், மற்ற நபரிடம் இருந்து ஒரு கிட்னியை தனமாக பெற்று, அதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பது உண்மை தான்.
சுஷில் யாதவ் என்ற நபருக்கு மூன்று சிறுநீரகங்கள் இருப்பது பற்றி மருத்துவர் ஒருவர் பேசுகையில், நாட்டிலேயே இப்படி மூன்று சிறுநீரகங்கள் இருப்பது என்பது அரிதாகவே காணப்படுகின்றன என்றும் இதன் மூலம் எந்தவொரு பாதிப்பும் வராது என்றும் கூறி உள்ளார். தனது வாழ்க்கையை அந்த நபர் எந்தவித பிரச்சனையும் இன்றி வாழலாம் என்றும், அதே வேளையில் ஏதாவது பிரச்சனை உருவானால், உடனடியாக மருத்துவர்களை அணுகி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.