‘சென்னை மக்களுக்கு குட் நியூஸ்’... ‘அடுத்த வருஷம் கோடை காலத்தில்’... ‘பொதுப் பணித்துறை அளித்த முக்கிய தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தமுறை கோடை காலத்தில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

நிவர் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு ஏரிகளும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்த திருவள்ளூர் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், 'செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக தினந்தோறும் 100 கனஅடி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
மேலும் ‘சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கி வரும் ஏரிகளான, பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளில் 9 டிஎம்சி தண்ணீர் கையிருப்பு உள்ளதாகவும், இதனால் கோடை காலத்தில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது’ எனவும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை எட்டியதை அடுத்து உபரிநீர் திறந்துவிடப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
