'கொட்டித் தீர்க்கும் பேய் மழை!'.. திறந்து விடப்படும் சென்னையின் மிக முக்கியமான இன்னொரு ஏரி.. வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த கலெக்டர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புயல் காரணமாக பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை புழல் ஏரி திறக்கப்படவுள்ளதாகவும், அதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் கலெக்டர் பொன்னையா.

கனமழை காரணமாக சென்னை புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகிக் கொண்டே செல்கிறது. 21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 19 அடியை எட்டியுள்ளதனால் உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (டிச.,04) மாலை 3 மணிக்கு முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏரிக்கு நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என்பதால் கரையோர மக்களுக்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா புழல் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆனது சுற்றி உள்ள கிராமங்களான நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட் லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

மற்ற செய்திகள்
