#வீடியோ : 'பச்ச பட்டினி' விரதம் இருந்தால் 'கொரோனாவுக்கு' 'குட்பை' சொல்லலாம்... 'சமயபுரம்' மாரியம்மனுக்கு 'விரதமிருக்குமாறும்' வேண்டுகோள்... 'நித்தியானந்தா' கூறும் புதிய 'மருத்துவம்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 16, 2020 07:33 AM

ஹிந்து மதத்தை கடைப்பிடிக்கும் எந்த ஒரு நகரிலும் கொரோனா பாதிப்பு இல்லை எனக் கூறும் நித்யானந்தா பச்ச பட்டினி விரதம் இருந்தால் கொரோனா வைரஸ் தாக்காது என தனது புதிய வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Coronavirus virus does not attack if starving-Nithyananda

இந்தியாவில்  பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் சற்றும் சளைக்காமல் தனது உபதேசங்களை பக்தர்களுக்கு வழங்கி வருகிறார் நித்தியானந்தா. கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கி அதற்கு தான் பிரதமராக இருப்பதாகவும் அங்கு குடியேற 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டகள் உள்ளதால் அவரைப் பிடிக்க சர்வதேச போலீசார் மூலம் ஃப்ளூ நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா யூட்யூப் சேனல் மூலம் தொடர்ந்து தனது பக்தர்களுக்கு சொற்பொழிவாற்றி வருகிறார். நேற்று வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸூக்கு புதிய மருத்துவம் ஒன்றை கூறியுள்ளார். 

புதிய வீடியோவில் பச்ச பட்டினி விரதம் விரதம் இருந்தால் கொரோனா நம்மை அண்டாது என விளக்கமளித்துள்ளார். உலகில் ஹிந்து தர்மத்தை தவறாமல் கடைப்பிடிக்கு பகுதிகளில் கொரோனா தாக்கம் அறவே இல்லை என் சுட்டிக்காட்டியுள்ள அவர், மாசி மாத விரதத்தை சரியாக கடைப்பிடித்தால் கொரோனா தாக்கம் இருக்காது எனக் கூறியுள்ளார்.  மேலும் மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீரில் தினமும் நீராடுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாசி மகம் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து மாரியம்மன் கோயில்களுக்கும் மூல கோயிலாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில், அம்மன் விரதமிருப்பதாகவும், அம்மனுக்கு நெய்வேத்யம் செய்யப்படும் பானகம், இளநீர், வெண்ணெய் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்து வந்தால் வைரஸ் தாக்குதல் அறவே இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரசால் கைலாசா இதுவரை பாதிக்கப்படவில்லை என்று கூறும் நித்தியானந்தா, எதிர்காலத்திலும் எங்களை கொரோனா வைரஸ் தாக்காது என கூறியுள்ளார். பரமசிவனும், காலபைரவரும் தங்கள் பாதுகாவலர்களாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags : #CORONA #NITHYANANDA #KAILASA #MEDICINE #STARVING #SAMAYAPURAM #MARIYAMMAN #TEMPLE