VIDEO: அதே 'டெய்லர்' அதே வாடகை... சூப்பர் ஓவரில் 'மீண்டும்' மோதிக்கொண்ட அணிகள்... 'திரில்' வெற்றியை தட்டிப்பறித்த கோலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி தற்போது வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி மணீஷ் பாண்டே(50), கே.எல்.ராகுல்(39), ஷர்துல் தாகூர்(20) ஆகியோரின் அதிரடியால் 165 ரன்களை எடுத்தது.
இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு முன்ரோ(64), ஷெப்பர்ட் (57) நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இந்திய அணி வீரர்கள் செய்த பீல்டிங் தவறுகளால் மேட்சை நியூசிலாந்து அணி வென்றுவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி ஓவரில் அதிரடி காட்டிய தாகூர் ராஸ் டெய்லர், மிட்செல் ஆகியோரை வெளியேற்றினார்.
விக்கெட் கீப்பர் ராகுலும் தன்னுடைய பங்குக்கு ஷெப்பர்ட்(57), சாண்ட்னர்(2) ஆகியோரை ரன் அவுட் செய்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 165 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது. இதையடுத்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு ஷெப்பர்ட், முன்ரோ இருவரும் ஓபனிங் கொடுத்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா பந்து வீசினார். 1 ஓவர்கள் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்தது.
King 👑 Kohli👑
Thanks to Kl Rahul, Manish Pandey and Sardool Thakur ❣#NZvsIND pic.twitter.com/C0wrQOry6a
— Sajan Randhawa (@crtified_fan_AK) January 31, 2020
இதையடுத்து இந்திய அணி சார்பாக விராட் கோலி, ராகுல் இருவரும் களமிறங்கினர். போன போட்டியில் சூப்பர் ஓவரை வீசிய சவுதியே இந்தமுறையும் சூப்பர் ஓவரை வீசினார். முதல் பந்தில் சிக்ஸர் அடித்த ராகுல், அடுத்த பந்தில் 4 ரன்கள் எடுத்தார். 3-வது பந்தில் ராகுல் அவுட்டாக சஞ்சு சாம்சன் இறங்கினார். 4-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த கோலி, 5-வது பந்தில் பவுண்டரி அடித்து போட்டியை வென்றார். இதனை அடுத்து இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட இந்த டி20 தொடரில் 4-0 என முன்னிலை வகிக்கிறது.