நீருக்கடியில் நீண்ட முத்தம்.. கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற வைரல் தம்பதி..! அதுவும் இவ்ளோ நேரமா?
முகப்பு > செய்திகள் > உலகம்தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெத் நீல் என்பவரும் கனடாவை சேர்ந்த மல்ஸ் கிளாடியர் என்பவரும் இணைந்து நீருக்கு அடியில் நீண்ட நேரம் முத்தம் கொடுத்ததை அடுத்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளனர்.

Image Credit : Photo Fanatics/Guinness World Records
ஆம், அடிப்படையில் ஆழ்கடல் பயிற்சியாளர்களான இவர்கள் இருவரையும் கடலும், காதலும் இணைந்து பயணிக்க வைத்தது. அதன் பிறகு இவ்வருடத்தில் காதலர் தினம் வருவதையொட்டி, இந்த காதலர் தினத்தை புதுமையாக எதிர்கொள்ள முடிவெடுத்த இவர்கள் சுமார் 13 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத நீருக்கடியிலான முத்த சாதனை சவாலை செய்வதென கருதினர்.
அதன்படி, 3 நிமிடம் 34 விநாடி என்கிற முன்சாதனையை இத்தாலி தம்பதியினர் பதித்திருந்தனர். அதை முறியடிக்க முடிவு செய்த இந்த தம்பதியர், கடந்த பிப்.4 அன்று மாலத்தீவு நீச்சல் குளம் ஒன்றில் மூழ்கி தலா 3 நிமிடங்களுக்கு, பயிற்சி பெற்றார்கள். அதன்பின்னர் முழுமூச்சாக கோதாவில் குதித்த இவர்கள், முத்தமிட ஆரம்பித்து இதற்கு முந்தைய உலக சாதனையாக இருந்த அந்த சாதனையை வெற்றிகரமாக முறியடித்தனர். ஆம், சரியாக 4 நிமிடம் 6 விநாடிகளுக்கு நீருக்கடியில் இடைவிடாது முத்தமிட்ட இந்த ஜோடி தான் இப்போது கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளனர்.
அன்பினையும், அதீத காதலையும் என இடத்திற்கேற்ப வெளிப்படுத்தும் முத்தத்தைக் கொண்டு இந்த தம்பதியர் நான்கு நிமிடம் ஆறு வினாடிகள் வரை நீருக்கடியில் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்து கவனம் ஈர்த்துள்ளனர். இவர்களுக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் பரிசு வழங்கப்பட்டதை அடுத்து, இவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
To Readers : These Couple are trained professionals, don't try this at home.

மற்ற செய்திகள்
