NEEYA NAANA: "நான் மதுர பொண்ணு.. கறி தோசை, புரோட்டா, சிக்கன் புடிக்கும்..".. அவரு LOVE டைம்ல NON VEG, திருமணத்துக்கு பின் VEG ஆகிட்டாரு.. கணவர் பற்றி இளம் பெண்ணின் வைரல் பேச்சு.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒவ்வொரு வாரமும் நீயா நானாவில் டிஸ்கஸ் செய்யப்படும் தலைப்புகள், அந்த வாரத்தில் ட்ரெண்டு ஆகி விடுவது வழக்கம். அதுமட்டுமின்றி பல வருடங்கள் கழித்தும் நீயா நானாவில் பேசப்படும் ஒவ்வொரு தலைப்பும், இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும்.

தினசரி, சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தங்களுடைய சிந்தனைகளை நேரடியாக பகிர்ந்து கொள்வதற்கு வழிவகுக்கும் ஒரு களமான நீயா நானா, விவாத மேடை புதிய புதிய பார்வைகளையும் கோணங்களையும் வெளிக்கொண்டு வருவதில் முன்னிலை வகிக்கிறது.
அண்மையில் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் சைவ சமையலை விரும்பி சாப்பிடும் கணவர் VS அசைவத்தை விரும்பும் மனைவி என்கிற தலைப்பில் கணவன் & மனைவிமார்களுக்கு இடையேயிலான விவாதம் நடைபெற்றது. இதில் தமது கணவர் தம்மை அசைவம் என்று சொல்லி ஏமாற்றி திருமணம் செய்துவிட்டதாகவும், இப்போது வீட்டில் அசைவம் சமைக்க விடமாட்டேன் என்கிறார் என்றும் குறிப்பிட்டார்.
குறிப்பாக இளம் பெண் ஒருவர், “நான் அவரை லவ் பண்ணும்போது அசைவம் சாப்பிட்டார். நான் மதுரையில் இருந்து வரேன்.. எனக்கு கறி தோசை, பரோட்டா, சால்னா, சிக்கன் வெச்சு சாப்டுறது ரொம்ப பிடிக்கும். அப்போ அப்படி இருந்தவர், இப்போ மெஜாரிட்டி சைவத்து பக்கம் போய்விட்டார். அவர் என்னை அசைவம் சாப்பிட கூடாது என வற்புறுத்தவில்லை. ஆனாலும் சைவம் பக்கம் தான் திரும்ப வேண்டியதா இருக்கு.” என்று மனம் திறந்து தன் உள்ளக் குமுறலை கொட்டி தீர்த்தார்.
இது தொடர்பாக பேசிய அப்பெண்ணின் கணவர், “காதலில் இருந்தபோது எதுவும் சொல்ல மாட்டேன். அவள் அசைவம் சாப்பிட சொல்லும்போது, நேர்மையாக அசைவம் சாப்பிட்டு பார்த்தேன். ஆனால் இவங்க எல்லாம் கொடுக்குற பில்டப் அளவுக்கு அப்படி என்னதான் சிக்கனில் டேஸ்ட் இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. சப்பென இருக்கிறது சிக்கன். அதற்கு பதில் உருளைக்கிழங்கு ஃப்ரை எவ்வளவோ அருமையா இருக்கும்” என்று சொல்லியுள்ளார். இந்த தம்பதி இப்போது வைரல் ஆகியுள்ளனர்.

மற்ற செய்திகள்
