தளபதி விஜய் பாணியில் சூப்பரா சொன்ன பிரபல கிரிக்கெட் வீரர்..! தீயாய் பரவும் ட்வீட்...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Feb 16, 2023 07:02 PM

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டி, டெல்லியில் வைத்து நாளை (17.02.2023) நடைபெற உள்ளது.

Suryakumar Yadav latest tweet viral with varisu vijay speech

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | "விபத்து நடந்ததுக்கு அப்புறம் இப்டித்தான் இருந்துச்சா".. 35 வருஷம் கழிச்சு வெளியான டைட்டானிக் கப்பலின் வீடியோ!!

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகிறது. இதன் முதல் போட்டி, நாக்பூர் மைதானத்தில் வைத்து நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி இருந்த இந்திய கிரிக்கெட் அணி, இரண்டரை நாட்களில் போட்டியை முடித்து இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியையும் பெற்றிருந்தது.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா, அஸ்வின் உள்ளிட்டோர் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். அதே போல, கேப்டன் ரோஹித் ஷர்மாவும் சதமடித்து அசத்தி இருந்தார். இதனிடையே, 2 ஆவது டெஸ்ட் போட்டி நெருங்கும் நேரத்தில் அதன் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Suryakumar Yadav latest tweet viral with varisu vijay speech

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் பகிர்ந்த ட்வீட் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தனது அதிரடியால் கவனம் ஈர்த்த சூர்யகுமார் யாதவ், டி 20 போட்டியின் பேட்டிங் தரவரிசை பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் தொடரிலும் அறிமுகமாகி உள்ளார். இதனால், டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி 20 என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சூர்யகுமார் தனது முத்திரையை பதிப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Suryakumar Yadav latest tweet viral with varisu vijay speech

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே, 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த சூர்யகுமார் யாதவ், தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, தனக்கு போட்டி தான் என்பது போன்ற தனது கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார். இந்த கேப்ஷன் தான் தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது. முன்னதாக இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்த நடிகர் விஜய், 1990 முதல் தனக்கு போட்டியாளராக ஒரு நபர் இருந்து வருவதாக கூறி இறுதியில் அது ஜோசப் விஜய் தான் என தனது பெயரையே விஜய் கூறி இருந்தார். தனக்கு எப்போதும் போட்டி தான் என்பதை குறிப்பிட்டு விஜய் அப்படி பேசி இருந்தார்.

Suryakumar Yadav latest tweet viral with varisu vijay speech

Images are subject to © copyright to their respective owners.

அப்படி இருக்கையில் நடிகர் விஜய்யுடைய ஸ்டைலில் கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவும் தனக்கு போட்டி தான் என்பது போல தன்னுடைய கேப்ஷனில் குறிப்பிட்டுள்ள விஷயம் இணையத்தில் அதிகம் பேசு பொருளாகவும் மாறி உள்ளது.

Also Read | "என் மகனா நீ கிடைக்க என்ன புண்ணியம் செஞ்சேனோ?".. 100 வயது தந்தையை நெகிழ வெச்ச 70 வயசு மகன்.. கண்கலங்க வைக்கும் வீடியோ!!

Tags : #SURYAKUMAR YADAV #SURYAKUMAR YADAV LATEST TWEET #VARISU VIJAY SPEECH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Suryakumar Yadav latest tweet viral with varisu vijay speech | Sports News.