"நூடுல்ஸ இப்டியும் பண்லாமா??.." மசாலா, மேகிய சேர்த்து".. அப்றம் அதோட... வைரல் வீடியோ
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தொற்றுக்கு பிறகான காலகட்டங்களில், மக்கள் மிகுதியான நேரத்தில் வீட்டிலேயே முடங்கிப் போயினர்.

இதன் காரணமாக, வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வந்த இளைஞர்கள் கூட, உணவகங்களில் சென்று உணவருந்தும் நிலை இல்லாமல், தங்களின் வீட்டிலேயே பொருட்களை வாங்கி சமையலைக் கற்றுக் கொண்டனர்.
அது மட்டுமில்லாமல், வழக்கமாக தாங்கள் உண்ணும் ஒரு உணவினை இணையம் மூலம் பார்த்து, அதனை வித்தியாசமாகவும் சமைத்து உண்டு ருசி கொண்டிருந்தனர்.
புதுவிதமான டிஷ்..
இப்படி சமீப காலமாகவே, இளைஞர் உள்ளிட்ட ஏராளம் பேர், சமையல் மீது அதிக நாட்டம் கொண்டு, வழக்கமாக இருக்கும் ஒரு ரெசிபியை சற்று புதிதாக, கிரியேட்டிவிட்டியுடன் தயார் செய்கின்றனர். இப்படி செய்யும் உணவு வகைகள், பெரும்பாலான நேரங்களில் வெற்றிகரமான உணவாகவே மாறுகிறது.
இப்படி வகை வகையான உணவு வகைகள், ஹோட்டல் உள்ளிட்ட இடங்களிலும் முயற்சி செய்து பார்ப்பதுண்டு. அப்படி ஒரு இடத்தில், மேகி நூடுல்ஸை சற்று வித்தியாசமாக, அதுவும் யாரும் எதிர்பார்த்து கூட பார்க்காத அளவில் தயார் செய்துள்ள வீடியோ ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
மேகி'ய இப்டி கூட பண்ணலாமா??
உதாரணமாக, மேகி நூடுல்ஸுடன், முட்டை, கேரட், பீன்ஸ் போன்ற பொருட்களை சேர்த்து அதனைத் தயார் செய்வார்கள். ஆனால், இந்த வீடியோவில், நூடுல்ஸ் மற்றும் அதன் மசாலாவுடன் மாம்பழங்களை துண்டு துண்டாக நறுக்கி போட்டு, உடன் மாம்பழ குளிர்பானம் ஒன்றையும் சேர்த்து, பரிமாறும் வீடியோ ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், பெண் ஒருவர் ஆரம்பத்தில் மசாலா மற்றும் மேகி நூடுல்ஸை சமைத்த பிறகு, அதற்கு மேல் மாம்பழ குளிர்பானம் ஒன்றை ஊற்றுகிறார். இதன் பின்னர், நூடுல்ஸை தயார் செய்து, அதன் மேல் மாம்பழத்தை துண்டு துண்டாக வெட்டி போட்டு பரிமாறுகிறார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
