"தேங்க் யூ சார்.. சாப்ட்டு ரேட்டிங் போடுறேன்.!" .. ஒரு கேட்டில் டெலிவரி ஊழியர்.. அசந்த நேரத்தில், இன்னொரு கேட் வழிவந்த நாய் பார்த்த வைரல் வேலை.!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாளுக்கு நாள் இணையதளத்தில் டிரெண்ட் ஆகி வரும் வீடியோக்கள் பலவும் பலராலும் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டு வருகின்றன.

இவற்றில் செல்ல பிராணிகள் மற்றும் விலங்குகள் செய்யும் சேட்டைகள் அடங்கிய குறும்பு வீடியோக்களும் அடங்கும். விலங்கினங்களை பொறுத்தவரை, அவை சீரியசாகவும் அந்த வீடியோக்களை பார்க்கும் நமக்கு அவை குறும்புத்தனமாகவும் தெரியலாம். ஆனால் சில வேலைகளில் மனிதர்களுடன் விலங்கினங்கள் செய்யக்கூடிய சில அரிய செயல்கள் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருப்பதால் பலரும் அந்த மாதிரியான வீடியோக்களை அதிகம் பகிர்வது உண்டு. அண்மையில் தேர்வு எழுதுவதற்கு குரங்கு ஒன்று சென்ற வீடியோ, இணையதளத்தில் தொடர்ந்து ட்ரெண்ட் ஆனதை அடுத்து பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில்தான், டெலிவரி ஊழியர் ஒருவருடைய உணவை அவர் அயர்ந்த கணநொடியில் நாய் ஒன்று அபகரித்துச் சென்ற வீடியோ ஒன்று வரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர், தான் உணவு எடுத்து வந்து ஒரு வீட்டுக்கு முன், தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்குகிறார். இறங்கியவர் தன்னுடைய வாகனத்தில் இருந்த உணவு பையை பாதி திறந்து வைத்து விட்டார். அப்போதுதான் கஸ்டமர் வந்ததும் உடனே உணவை எடுத்துக் கொடுக்க முடியும் என்பது அவருடைய கணக்கு.
ஆனால் அந்தப் பையை பாதி திறந்து வைத்துவிட்டு, கஸ்டமரின் வீட்டு வாசலில் இருந்த கேட்டை தட்டி கஸ்டமரை கூப்பிட்டு அழைக்கிறார் அந்த உணவு டெலிவரி ஊழியர். கஸ்டமர் யாரும் உள்ளிருந்து வரவில்லை. மாறாக, அந்த ஊழியர் நிற்பதற்கு பக்கத்து கேட்டில் இருந்து அரவம் தெரியாமல் ஒரு நாய் சைலன்டாக வெளியே வருகிறது. அது வரும் நேரம் அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது போல் அந்த உணவு டெலிவரி ஊழியரின் பைக்கில் இருந்த பையில் இருந்து உணவு பொட்டலம் தானாக பழம் நழுவி பாலில் விழுவது போல் கீழே விழுகிறது.
அதை பார்த்த அந்த நாய், தான் வந்த பாதையில் அந்த உணவுப் பொட்டலம் இருப்பதைக் கண்டு வேகம் எடுத்தது. உடனே சென்று லபக்கென உணவு பொட்டல கவரை சைலன்டாக கவ்விக்கொண்டு, அது இருந்த சுடு தெரியாமல் அங்கிருந்து போகும் திசையை நோக்கி நகர்ந்துவிட்டது. இதனிடையே கஸ்டமரை அழைத்துப் பார்த்துவிட்டு, திரும்பி பைக் பக்கம் வந்த அந்த உணவு டெலிவரி ஊழியர், பைக்கில் இருந்த பொட்டலம் எங்கே என்று கீழேவும் அக்கம் பக்கமும் தேடுகிறார். கடைசி வரை அவருக்கு நாய் எடுத்துச் சென்றது தெரிந்ததா என்று தெரியவில்லை. இது தொடர்பான வீடியோவை இணையதளத்தில் பலரும் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
