"குறுக்க இந்த கௌஷிக் வந்தா..". ஆண் நண்பருடன் வீடியோ காலில் பேசும் பெண்ணை படாத பாடு படுத்தும் செல்லப்பூனை.. வைரல் வீடியோ.!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்செல்ல பிராணிகளை வளர்ப்பதில் பலருக்கும் அலாதியான ஆர்வமும் இன்பமும் உண்டு. அப்படி வளர்க்கக்கூடிய செல்ல பிராணிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் இருக்கும்.

Also Read | ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த பொல்லார்ட்.. மும்பை அணிக்காக புது ரூட்டில் கொடுக்க போகும் என்ட்ரி!!
அவை செய்யும் சேட்டைகளும் எஜமானருடன் அவை காட்டும் அன்பும் பாசமும் பலருக்கும் பிடித்தமானவை. செல்ல பிராணிகளை வளர்ப்பதில் பொழுது போவதும் தெரியாது. பலர் பொழுதுபோக்குக்காக செல்ல பிராணிகளை வளர்க்க தொடங்கினாலும் அவை காட்டும் அதிக அன்பினால், பிற்காலத்தில் அவை இல்லத்தில் ஒருவராக மாறி விடுகின்றன.
கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை வீட்டிற்கு வெளியே வளர்க்கப்பட்ட பூனையும் நாயும் மெல்ல மெல்ல வீட்டுக்குள்ளேயும் எஜமானர்களால் அனுமதிக்கப்பட்டு தற்போது பெட்ரூம் வரை அவை மிகவும் சரளமாக விளையாடக்கூடிய காட்சிகளை காண முடிகிறது. அதிலும் நாய் நன்றியுடன் இருக்கும் என்றால் பூனை ஒரு படி மேலே சென்று எஜமானருடன் நிறைய உரிமை எடுத்துக் கொள்ளும்.
குறிப்பாக பூனைகள் தங்களுடைய எஜமானருடன் யார் எவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தாலும் அவற்றை ஒரு கட்டத்துக்கு மேல் அனுமதிக்காமல் எஜமானரை தொந்தரவு செய்யும் அல்லது எஜமானுடன் யார் உரையாடிக் கொண்டிருக்கிறாரோ அவர்களை சீண்டக்கூடிய இயல்பு வாய்ந்தவை. அப்படித்தான் வெளிநாட்டு பெண் ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் போனில் வீடியோ கால் பேசிக் கொண்டிருக்கிறார். இதை ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத செல்ல பூனை தன்னுடைய எஜமானரையே தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது. அதாவது அந்த பெண் வீடியோ கால் பேசுவதை முடிந்த மட்டும் செல்லப்பூனை தடுத்து பார்க்கிறது.
ஆனால் அது என்னவோ எஜமானரை கொஞ்சும் வகையிலேயே அனைத்தையும் செய்கிறது. ஆனால் உண்மையில் பூனையின் செயல் அந்த பெண்மணியை வீடியோ கால் பேச விடாமல் செய்வதால், பார்ப்பவர்களுக்கு அது எஜமானவை தொந்தரவு செய்வதாகவே படுகிறது. இந்த வீடியோவை இணையதளத்தில் பார்த்த பலரும் அந்த பெண்ணுடைய ஆண் நண்பர் வீடியோ காலில் பேசும்பொழுது பூனை இவ்வாறு செய்வதால், அந்த நண்பர் எரிச்சல் அடைவதை உணரமுடிவதாகவும் குறிப்பிடுகின்றனர். எனினும் இந்த பூனையின் செய்கைகள் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாக இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
— Animales y bichitos 🐾🌍 (@Animalesybichos) November 6, 2022
Also Read | “ட்விட்டரை என்கிட்ட கொடுங்க”... கோரிக்கை வச்ச பிரபல தொழிலதிபர்.. ஒரே வார்த்தையில் மஸ்க் போட்ட கமெண்ட்..!

மற்ற செய்திகள்
