கல்யாணமா? உறியடியா? வித்தியாசமாக நடந்த மாலை மாற்றல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாசமீபத்தில் இணையத்தில் வித்தியாசமாக நடந்த திருமணம் ஒன்று வைரலாக பரவிவருகிறது.
அந்தரத்தில் தொங்கிய மணமக்கள்
சமீபகாலமாக கல்யாணங்களை வித்தியாசமாக செய்வதில் இளம் தம்பதிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர், கிட்டத்தட்ட ஒரு சினிமாவை போல நாடகிய தருணங்கள் நிறைந்ததாக தங்கள் திருமணம் நடக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். மேலும் 5 நிமிடங்கள் வரை ஓடும் வீடியோக்களை யுடியூப் உள்ளிட்ட இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதுபோன்ற பல வீடியோக்களை நாம் யுடியூபில் காணலாம்.
திருமணங்களும் போட்டோஷூட்டும்
திருமணங்களில் இப்போதெல்லாம் கேண்டிட் போட்டோஷூட் என அழைக்கபடும் மணமக்களை வித்தியாசமாக போட்டோ எடுக்கும் பழக்கம் அதிகமாகியுள்ளது. இந்த கேண்டிட்களுக்காக மணமக்களும் ஏதாவது வித்தியாசமாக செய்து அதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வது இப்போது வாடிக்கையாகிவிட்டது. அப்படி ஒரு கேண்டிட் கல்யாண வீடியோதான் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இணையத்தைக் கலக்கிய கல்யாணம்
இணையத்தில் பரவும் அந்த வீடியோவில் மிகப்பெரிய கல்யாண மண்டபத்தில் மணமக்கள் இருவரையும் அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தூக்கிக்கொள்ள மேலே இருக்கும் கம்பியில் மணமகன் பிடித்துகொண்டு நிற்கிறார். அந்தரத்தில் ஆடும் மணப்பெண் அவருக்கு மாலை அணிவிக்கவேண்டுமாம். இதற்காக பேலன்ஸ் இல்லாமல் ஆடும் மணமகள், கஷ்டப்பட்டு சில முறை முயற்சி செய்து தோல்வியடைந்த பிறகு எப்படியோ மணமகனின் கழுத்தில் மாலையைப் போட்டுவிடுகிறார். இதைப் பார்த்த உறவினர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து கொண்டாடுகின்றனர்.
எங்கு நடந்த திருமணம்
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் என்னதான் கொண்டாட்டமாக இருந்தாலும் ஒருவேளை யாராவது தவறி விழுந்தால் என்ன ஆவது என கொஞ்சம் கண்டிப்போடு வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து எங்கு நடந்தது என்பது பற்றி பலரும் தேட ஆந்திராவின் நெல்லூர் பகுதியில் நடந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.